தெலுங்கு, தமிழில் அடியா? விஜய்யின் வாரிசுக்கு வரவேற்பு எப்படி?

பொங்கல் பண்டிகையொட்டி அஜித், விஜய், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன.

Twitter

அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகிறது.

இதேபோல சிரஞ்சீவி நடித்துள்ள வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி படங்கள் திரைக்கு வருகின்றன.

ஒரே நாளில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த 4 ஸ்டார்களின் படங்கள் திரைக்கு வருவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் விஜய்யின் வாரிசு படம் காதல், சென்டிமெண்ட், அதிரடி சண்டை நிறைந்த குடும்ப கதை.

விஜய்யின் வாரிசு தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உள்ளது.

இந்த சவால்களையும் மீறி `வாரிசு' வசூலில் சக்கைப்போடு போடும் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

வாரிசு திரைக்கு வரும் முன்பே வெளிநாட்டு உரிமை, இந்தி டப்பிங் உரிமை, ஆடியோ உரிமை போன்றவை ரூ.150 கோடிக்கு மேல் விலைபோய் உள்ளதாம்.

மாஸ் காட்டும் தளபதி! கலக்கும் வாரிசு ஸ்டில்ஸ்!

Follow Us on :-