ஆள விட்றா சாமி, அலறும் ஆடியன்ஸ்? – ராம் சேது விமர்சனம்!

அக்ஷய் குமார் நடித்து வெளியாகியுள்ள ராம் சேது திரைப்படத்தின் விமர்சனம்

Twitter

இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் “ராம் சேது”

இந்தியா, இலங்கை இடையே உள்ள ராமர் பாலம் பகுதியை தோண்டி கப்பல் செல்ல கால்வாய் அமைக்க முடிவு எடுக்கிறது இந்திய அரசு.

இதற்கான ஒப்பந்தம் இந்திரகாந்த் (நாசர்) என்னும் கார்ப்பரேட் முதலாளி ஒருவருக்கு அளிக்கப்படுகிறது.

ராமர் பாலம் என்பது ஆதாரமற்ற கற்பனை என நிரூபிக்க நாத்திகரான ஆர்யன் (அக்ஷெய் குமார்) தலைமையில் குழு ஒன்று ஆய்வுக்கு செல்கிறது.

ஆனால் அங்கு நடக்கும் சில சம்பவங்கள் ஆர்யனின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ராமர் பாலத்தை அவர் கண்டறிவதை தடுக்க அவரை கொல்ல இந்திரகாந்த் அடியாட்களை அனுப்புகிறார்.

Twitter

அவர்களிடமிருந்து தப்பி ராமர் பாலம் குறித்த ரகசியங்களை ஆர்யன் கண்டுபிடித்தாரா என்பது கதை.

எந்தவிதமான நம்பகமான ஆதாரமும் காட்டாமல் யூகத்திலேயே பல காட்சிகள் இருப்பது ஏற்கமுடியாததாக உள்ளது.

அக்ஷய் குமார் எண்ட்ரிக்கே நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது பொறுமையை சோதிக்கிறது. ஜாக்குலின், நுஸ்ரத் பாருச்சாவுக்கு போதிய ஸ்கோப் இல்லை.

படத்தின் ஒளிப்பதிவு, இசை மற்றும் கிராபிக் காட்சிகள் ரசிகர்களை ஓரளவு திருப்தி செய்யும் வகையில் உள்ளது.

பட வாய்ப்புக்காக கவர்ச்சி? சாக்ஷி அகர்வால் விளக்கம்

Follow Us on :-