பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா

பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா க்ளிக்ஸ்

அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி உருவாகியுள்ள இரண்டு பாக திரைப்படம் “பொன்னியின் செல்வன்”

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் 1” இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை காண ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த படத்தில் கார்த்திக், விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெய்ராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். படத்தின் ட்ரெய்லர் இரவு 11 மணி அளவில் வெளியாகி வைரலாகி வருகிறது

வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இருந்ததாக கமல்ஹாசன் கூறினார்.

ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டரையராக நடிக்க கேட்டதாகவும், மணிரத்னம் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

Crime Thiller-க்கு 2 ஹீரோயின் - கலக்கும் Vishnu Vishal!

Follow Us on :-