நடிகர் விஜய் - மனைவி சங்கீதா விவாகரத்து?

நடிகர் விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக விக்கிப்பீடியாவில் இடம் பெற்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Webdunia

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ளவர் விஜய். இவர் 1999ல் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த நிலையில் அதில் சங்கீதா கலந்துகொள்ளவில்லை.

அதேபோல் இயக்குனர் அட்லீ வீட்டு நிகழ்ச்சியிலும் விஜய் தனியாகவே சென்று கலந்து கொண்டார்.

சங்கீதா நிகழ்ச்சிகளுக்கு வாரததற்கு காரணம் அவர் தன் பிள்ளைகளுடன் லண்டனில் விடுமுறையை கழித்து வருவதால்தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்கிப்பீடியாவில் விஜய் – சங்கீதா விவாகரத்து செய்து கொண்டதாக இடம்பெற்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Webdunia

இதுகுறித்த ஸ்க்ரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Webdunia

விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்பதால் யாரோ இந்த விஷமத்தனமான வேலையை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Webdunia

சில நிமிடங்களில் இந்த தவறு சரிசெய்யப்பட்டு விவாகரத்து பகுதி நீக்கப்பட்டுள்ளது.

Webdunia

பீப் போட்ற அளவு பேசிட்டார அஜித்? கோலிவுட் ஷாக்!

Follow Us on :-