சோதனை மேல் சோதனை! விஜய் படங்கள் சந்தித்த டாப் பிரச்சினைகள்!
நடிகர் விஜய்யின் படங்களில் ரிலீஸாவதில் சிக்கல்களை சந்தித்த படங்கள்!
10. 2003-ல் வெளியான விஜய் படத்திற்கு ‘கீதை’ என பெயர் வைக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ‘புதிய கீதை’ என பெயர் மாற்றி வெளியானது.
9. ’சுறா’ படத்திற்கான நஷ்ட ஈடு கொடுக்காததால் 2011-ல் ’காவலன்’ வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் விஜய் நஷ்ட ஈடு கொடுத்தார்.
8. 2013ல் ’தலைவா’ படம் ஓடும் திரையரங்குகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் படத்திற்கு தடை. ‘டைம் டூ லீட்’ வார்த்தைகள் நீக்கப்பட்டதும் படம் ரிலீஸ்
7. 2014ல் வெளியான ‘கத்தி’ திரைப்படம் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் தயாரித்ததால் தமிழ் அமைப்புகளிடையே எதிர்ப்பு கிளம்பியது.
6. 2015ல் புலி படம் ரிலீஸின்போது விஜய் மற்றும் தயாரிப்பாளர் வீட்டில் வருமானவரி சோதனை. இதனால் அதிகாலை காட்சிகள் முழுவதும் ரத்தானது.
5. 2016-ல் வெளியான ‘தெறி’ படத்தின்போது மினிமம் கேரண்டி முறை தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே பிரச்சினை எழுந்தது.
4. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியாவை விமர்சித்ததால் பாஜக எதிர்ப்பு. படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்
3. பிகில் படத்தின் போஸ்டரில் இறைச்சி வெட்டும் கட்டையில் விஜய் கால் வைத்திருந்ததால் அந்த காட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கம் போராட்டம்.
2. மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின்போது நெய்வேலியில் செல்பி எடுத்த விஜய். அதை தொடர்ந்து அவரது வீட்டில் வருமானவரி சோதனையால் பரபரப்பு
1. தற்போது வாரிசு படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ள நிலையில் துணிவு போட்டியால் திரையரங்கு ஒதுக்கும் பிரச்சினை மற்றும் தெலுங்கு ரிலீஸ் பிரச்சினை.
kollywood
என்னையும் அங்க கூட்டிட்டு போ! கீர்த்தியிடம் கேட்ட ஷ்ரேயா!
Follow Us on :-
என்னையும் அங்க கூட்டிட்டு போ! கீர்த்தியிடம் கேட்ட ஷ்ரேயா!