இந்த ஆண்டில் உயிரிழந்த பிரபல நடிகர்கள்!

2022ம் ஆண்டில் உயிரிழந்த திரைத்துறையின் பிரபலமான நடிகர்கள்!

Various Source

ப்ரவீன் குமார் சோப்தி – பிரபலமான மகாபாரத டிவி சீரியலில் பீமன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர். கமல்ஹாசனின் மைக்கெல் மதன காமராஜன் படத்தில் ‘பீம் பாய்’ கேரக்டரில் நடித்தவர். தனது 74வது வயதில் உயிரிழந்தார்.

சலீம் கோஷ் – பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் பிரபலமான வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்தவர் சலீம். வெற்றி விழா படத்தில் இவர் நடித்த ஜிந்தா கேரக்டர் பிரபலம். தனது 70 வயதில் உயிரிழந்தார்.

’பூ’ ராமு – நிகழ்நாடக நடிகரும், திரைப்பட நடிகருமாக திகழ்ந்தவர் பூ ராமு. பூ, அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்

ப்ரதாப் போத்தன் – தமிழிம் 80களின் பிரபல நடிகர் ப்ரதாப் போத்தன். தமிழில் வெற்றிவிழா, லக்கிமேன், சீவலப்பெரி பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். 69வது வயதில் உயிரிழந்தார்.

பம்பா பாக்யா – பிரபலமான பிண்ணனி பாடகரான பம்பா பாக்யா பல ஆல்பம், திரையிசை பாடல்களில் பாடியுள்ளார். பொன்னி நதி, புல்லினங்காள் உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியவர் 49 வயதில் காலமானார்.

விக்ரம் கோகலே – பல இந்திய மொழிகளில் நடித்துள்ளவர் விக்ரம் கோகலே. கமல்ஹாசனின் ஆளவந்தான், ஹே ராம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நவம்பர் 26 அன்று உயிரிழந்தார்.

ஹரி வைரவன் – வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்தவர் ஹரி வைரவன். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தார்.

சிவநாராயணமூர்த்தி – தமிழில் பிரபல காமெடி நடிகரான இவர் விவேக், வடிவேலு உள்ளிட்ட பலரின் காமெடிகளில் நடித்துள்ளார். தனது 68வது வயதில் உயிரிழந்தார்.

சாண்டா கிளாஸ் இப்படித்தான் இருப்பாரா? கிறங்கடித்த தர்ஷா குப்தா!

Follow Us on :-