மீனாவுக்கு 2-வது திருமணமா?

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த மீனா தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.

Instagram

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார்.

கடந்த 2009-ல் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வித்யா சாகரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.

இதனால் மனம் உடைந்து துயரத்தில் இருந்த மீனா அதில் இருந்து மீண்டு தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது 46 வயது ஆகும் நிலையில் மீனாவிடம் 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்துவதாக தெரிகிறது.

குடும்ப நண்பர் ஒருவரையே மாப்பிள்ளையாக தேர்வு செய்து இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஆனால், மீனாவுக்கு 2-வது திருமணம் செய்து கொள்ளும் எந்த திட்டமும் தற்போது இல்லை என்று தெரிகிறது.

என் பெயரை சின்னாபின்னமாக்குறாங்க! வேதனையில் ராஷ்மிகா மந்தனா!

Follow Us on :-