இவர்தான் என் லவ்வர்..! ஓப்பனா சொன்ன ரகுல் ப்ரீத் சிங்!

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதல் குறித்து Open Talk!

Instagram

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் தீரன், என்.ஜி.கே, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் இவர்.

தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்களிலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடிகர் ஜாக்கி பக்னா ரகுல் ப்ரீத் சிங்குடன் இருக்கும் படத்தை பகிர்ந்து, தான் அவரை காதலிப்பதாக அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர் “சில நடிகைகள் தங்கள் காதலை மறைத்து வைப்பது ஒரு மனநிலை! ஆனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை..

Instagram

.. கேமரா முன்னால் நடிப்பது போதும். நிஜ வாழ்க்கையில் நடிக்க தேவையில்லை. எல்லாருக்கும் வாழ்க்கை துணை முக்கியம்..

Instagram

.. நானும் ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாக, ஒன்றுபட்ட கருத்துடன் இருக்கிறோம். எனக்கு பயம் இல்லாததால் காதலை மறைக்கவில்லை” என கூறியுள்ளார்.

Instagram

ஃப்ளாப் கொடுத்து மீண்ட சூப்பர் ஸ்டார்! அமிதாப் பச்சன் 80வது பிறந்தநாள்!

Follow Us on :-