Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

"Bigg Boss" வீட்டில் பெண்களிடம் சில்மிஷம்... RED CARD கொடுத்து வெளியேற்றும் பிக்பாஸ்..?

இந்த பிக் பாஸ் சீசன் 6 ல முதல் வாரமே அசத்தலாக ஆரம்பிச்சு இருக்குனு வீக்எண்ட் ப்ரோக்ராம் ல கமல் சாரே ஆச்சரியப்பட்டார் அதுக்கு கொஞ்சமும் குறையாமல் ஒவ்வொரு வாரமும் அடிதடி சண்டைனு ஆடியன்ஸ் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி அசத்தலான போயிட்டு இருக்கு.. இதுல அதிகமா கான்ட்ரவர்சி ல தனலட்சுமி அப்புறம் அசல் கோளாறு இவங்க ரெண்டு பேரும் தா சிக்கி இருக்காங்க... இப்ப இவங்க ரெண்டு பேருக்குமே பைட்டு ஆரம்பிச்சிருக்கு... இதுல அசல் கோளாறு பெண்கள் கிட்ட நடந்துக்கிற முறைபற்றி நெட்டிசன் மத்தியில் பெரிய விவாதமே நடந்தது..இவர் கிட்ட நட்பா பழகிட்டு இருந்த பெண்கள் கூட இவர் பேசுற விதத்துல பலமுறை கோபப்பட்டு இருக்காங்க... குவின்ஸி மகேஸ்வரி அப்படின்னு எல்லார்கிட்டயும் சில தவறான தொடுதலை ஈடுபட்டு இருக்காங்கன்னு பார்வையாளர்கள் நினைக்கிறாங்க...இது மட்டும் இல்லாம இன்னைக்கு தனலட்சுமிக்கும் அசல் கோளாறுக்கும் நடுவுல பெரிய பிரச்சினை வந்து இருக்கு அதுவும் தனலட்சுமி பற்றி அவர் பேசிய இழிவான வார்த்தைக்காக தனலட்சுமி பொங்கி எழுந்து இருக்காங்க தனலட்சுமி மேல பல அதிருப்தி இருந்தாலும் இந்த விஷயத்துக்காக நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து இருக்காங்க ஃபர்ஸ்ட் சீசன்ல கவிஞர் சினேகன்க்கு கட்டிப்புடி சினேகன் அப்படின்னு பேரு வந்த மாதிரி இந்த சீசனில் அசல் கோளாறுக்கு காஜி கோளாறு நெட்டிசன்க்கள் கலாய்ச்சிட்டு இருக்காங்க . பிக் பாஸ் சீசன் 4 ல சரவணன் பஸ்ல பெண்களை இடிச்சிருக்கேன்னு சொன்ன வார்த்தைக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டே வெளியேற்றி இருக்காங்க ஆனா பெண்கள் கிட்ட இப்படி தவறா நடந்து இருக்க அசல் கோளாறுக்கு பிக்பாஸ் ரெட் கார்ட் வழங்கப்படுமா என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டுட்டு வராங்க இந்த வாரம் கமல் சார் இதை பற்றி கேள்வி எழுப்புவது பார்க்கலாம்...