Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

PAPஅலுவலகவளகாத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போரட்டம்

பொள்ளாச்சி PAPஅலுவலகவளகாத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போரட்டம். பொள்ளாச்சி-அக்-18 கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலூர் மற்றும் ஆனைமலை தாலுகாக்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் மண்பாண்டம், அகல்விளக்கு, உருவாரம் உள்ளிட்ட மண்பாண்டப் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மண்பாண்டத் தொழிலுக்கு தேவையான மண்ணுக்கு கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தையை நம்பி உள்ளனர். கடைசியாக கடந்த 2019 ம் ஆண்டு கோதவாடி குளத்தில் மண் எடுத்து மண்பாண்டப் பொருட்களை உற்பத்தி செய்தனர். அதன் பின்னர் கரோனா காலக்கட்டத்தில் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டதால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது வரை குளத்தில் மண் எடுக்க நீர்வளத்துறையினர் அனுமதி வழங்கவில்லை என புகார் தெரிவித்து மண்பாண்டத் தொழிலாளர்கள் பொள்ளாச்சியில் உள்ள பிஏபி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.