Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

ஆறுமுகசாமி அறிக்கையை வைத்து சட்ட ரீதியாக ஒன்றும் செய்யமுடியாது

தமிழகத்தில் அதிகளவு போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலைமச்சர் அதிக கவன செலுத்த வேண்டும். போதை ஒழிப்பு பிரிவில் போதுமான காவலர்கள் இல்லை. இன்னும் 20 ஆயிரம் காவலர்கள் தேவைப்படுகிறார்க்ள். அடுத்த தலைமுறையயை காப்பாற்ற வேண்டும். போதைப்பழக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை கோவைக்கு விமானத்தில். வந்தால் 3300 ரூபாய் ஆகிறது. அதே ஆம்னி பேருந்தில் 3700 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். சாதாரண காலத்திலும் கட்டணத்தை குறைக்க வேண்டும் . தனியார் நிறுவனங்கள் பால் விலையை குறைக்க வேண்டும் ஆவின் பால் விலையை விட தனியார் பால் விலையை உயர்த்தியுள்ளனர். தனியார் பால் நிறுவனங்கள் நான்கு முறை பால்விலையை உயர்த்தியுள்ளனர். இதை தமிழக அரச தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை பகுதியில் செம்மண் குவாரிகளுக்கு 450 கோடி ரூபாய் பசுமைத்தீர்ப்பாயம் அபராதம் விதித்துள்ளது. செம்மண் அள்ளும் குவாரிகளை அதிகரிகள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பூரண மதுவிலக்கு குறித்து பாமக தொடர்ந்து போராடி வருகிறது. மதுபான கடையின் மூலமாக அரசுக்கு 33% வருமானம் வருகிறது. இது நாட்டிற்கு வீழ்ச்சியாக பார்க்க வேண்டும். வளர்ச்சியாக பார்க்ககூடாது என்றார். திபாவளி அன்று மதுக்கடைகளுக்கு இலக்கு வைக்காதீர்கள் கவிக்கு இலக்கு வையுங்கள் இல்லை குழதைகளுக்கு போடப்படும் தடுப்பூசிக்கு இலக்கு வையுங்கள் குடிப்பதற்கு வைக்காதீர்கள். இது தமிழக அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றார். பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் மட்டுமல்ல மற்ற அனைத்து திட்டங்களுக்கும், தமிழக முதலமைச்சர் கேரள முதலமைச்சரை சந்தித்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார். ஆறுமுகசாமி அறிக்கை இன்னும் தெளிவாக இல்லை அதனை வைத்து அரசியல் செய்யலாமே தவிர சட்டரீதியாக வேறொன்றும் செய்ய முடியாது.நுட்பமான விளக்கம் ஒன்றும் இல்லை என்றார். அதிமுக பிரச்சனையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அருணா ஜகதீசன் அறிக்கையில் 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கூடுதல் இழப்பீடு வழங்க கூறியிருக்கிறார்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பாடமாக வைத்து காவலர்கள் கற்றுகொள்ள வேண்டும். உயிரிழந்தது பொதுமக்கள் என்பதை உணர்ந்து காவல் துறையினர் செயல்பட வேண்டும் என்றார். பாமக சார்பில் கோவையில் ஒரு மாடல் அரசுப்பள்ளி அறையை அமைத்துள்ளனர். அதனை பள்ளிகல்வித்துறை பின்பற்றி அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் எனத்தெரிவித்தார்.