Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

நகையை திருடி தப்பிச்சென்று தலைமறைவாக இருக்கும் வட மாநில நபர்

கோவை இராஜ வீதி அடுத்த சண்முகா நகர் பகுதியில் மோகன் டை என்ற பெயரில் மோகன் குமார் (45) தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தங்க நகை கடைகள் மற்றும் மொத்த வியாபாரமாக தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரமோத் வித்தால் போச்லே (20 ) என்பவர் பணி புரிந்து வந்துள்ளார். நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் பட்டறை திறக்கும் முன்பும், மற்ற ஊழியர்களும் உரிமையாளரும் பணிக்கு வராத நிலையில் கடையின் சாவியை எடுத்து கடையில் இருந்த 1 கிலோ அளவிளான தங்க நகை மற்றும் கட்டிகளை திருடுவிட்டு தப்பியோடியுள்ளனர். கடையின் சாவியை வைக்கும் இடத்தையும், கடை திறக்கும் நேரத்தை நன்று தெரிந்துக்கொண்டு திருடிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதனையடுத்து நேற்று வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் மோகன் குமார் அளித்த புகாரில் 50 இலட்சத்து 50 ஆயிரத்து மதிப்பிலான 1067.850 கிராம் தங்க நகைகள் திருடுபோனதாக போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் நகை திருடியவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் போலிசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நகை திருடிக்கொண்டு சொந்த ஊர் சென்றுயிருப்பாரா? நகையை வேறு யாரிடமாவது விற்பனை செய்ய முயல்கிறாரா? என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.