Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் கல்வி விழிப்புணர்வு ஓட்டம் - விஷால் தொடங்கி வைத்தார்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (12:42 IST)
பெண் கல்வியை வலியுறுத்தும் விழிப்புணர்வு மாரத்தான் சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தானை நடிகர் விஷால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
 

 
நிகழ்வில் பேசிய விஷால், "பெண் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்துக்கு அதிகாலையிலேயே ஏராளமான பெண்கள் திரண்டு வந்திருப்பது மகிழ்ச்சியானது. பெண்கள் தற்போது அரிய சாதனைகளை செய்து வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
 
பெண்கள் கல்வி கற்பது ஒட்டு மொத்த குடும்பத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. சமுதாயத்தில் பெண்களும் சொந்தக் காலில் நிற்பதற்கு கல்வியே அடிப்படை. எனவே பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வை அடித்தட்டில் இருக்கும் பெண்கள் வரை கொண்டு சேர்ப்பது நமது கடமை" என்றார்.
 
மேலும், பெண்களின் முன்னேற்றத்துக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் அசத்தலான போஸ்… திவ்யபாரதியின் கண்கவர் போட்டோஸ்!

காலா, வலிமை நாயகி ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

தியேட்டரில் சோபிக்காத விடாமுயற்சி?... ஓடிடி & சேட்டிலைட் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

மீண்டும் இணையும் ‘டிராகன்’ கூட்டணி… இயக்குனர் அஸ்வத் கொடுத்த அப்டேட்!

அண்ணன் சூர்யாவோடு மோதுகிறாரா கார்த்தி?... வா வாத்தியார் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments