தமன்னாவைப் பிரிந்த காதலர் விஜய் வர்மா… தற்போது இந்த நடிகையோடுதான் உலா வருகிறாரா?

vinoth
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (15:26 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு ஒரு குறுகிய காதலிலும் இருந்து பிரிந்துவிட்டார். இந்நிலையில் தற்போது விஜய் வர்மா மற்றொரு பாலிவுட் நடிகையான பாத்திமா சனா சேக் என்ற நடிகையை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருகின்றனர் என்பது பாலிவுட் ஊடகங்களுக்குத் தீனியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments