Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு திருமணம் குறித்து டி.ராஜேந்தர் அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (14:06 IST)
சிம்பு திருமணம் குறித்து டி.ராஜேந்தர் அதிகாரபூர்வ அறிவிப்பு
நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோர்களுடன் நடிகர் சிம்பு காதல் என்றும் அதன்பின் இருவருடனும் பிரேக் அப் ஆகிவிட்டது என்றும் கோலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கள் வந்தன என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி பல நடிகைகளுடன் சிம்பு கிசுகிசுக்கப்பட்டார் என்பதும் அவரது திருமண செய்தி ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பதும் வழக்கமான ஒன்று
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவரை சிம்பு திருமணம் செய்ய இருப்பதாகவும் அந்தப் பெண் சிம்புவின் தூரத்து உறவினர் என்றும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்தவுடன் இருவருக்கும் லண்டனில் திருமணம் நடக்க இருப்பதாகவும் ஒரு சில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் இந்த செய்தியை சிம்புவின் பெற்றோர்களான டி ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் மறுத்துள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம்
 
இதனையடுத்து லண்டன் பெண்ணை சிம்பு மணக்கவிருப்பதும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் சிம்புவின் திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

விஷாலின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்!.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்