தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா!

vinoth
சனி, 5 ஜூலை 2025 (08:17 IST)
இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் மேல் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா பல வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்று தந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ரெய்னா சர்வதேசக் கிரிக்கெட்டில் பங்களித்ததை விட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என செல்லமாக அழைத்து வருகின்றன. ஆனால் இறுதிகட்டத்தில் சி எஸ் கே அணியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அந்த அணியில் இருந்து விலகி, பின்னர் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகினார்.

இப்போது வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமானவரான ரெய்னா தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். லோகன் என்பவர் இயக்கும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரெய்னாதான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை DKS புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் அறிவிப்பை சமீபத்தில் சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments