Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன பட்ஜெட் படங்கள் - விக்ரமன் சொல்வதை கேளுங்க

சின்ன பட்ஜெட் படங்கள் - விக்ரமன் சொல்வதை கேளுங்க

Webdunia
சனி, 7 மே 2016 (10:40 IST)
தமிழ் சினிமாவின் பிரதான பிரச்சனையாக இருப்பது, சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாவதில் உள்ள சிக்கல். 


 
 
அப்படியே வெளியானாலும் அதிக திரையரங்குகள் கிடைப்பதில்லை. எந்த சினிமா பிரபலமும் சினிமா விழாக்களில் இது பற்றியே பிரதானமாக பேசுகிறார்கள். இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் சமீபத்தில் கலந்து கொண்ட படவிழாவிலும் இது குறித்தே பேசினார்.
 
"இன்றைக்கு திரைப்பட சூழல் சிரமமாக இருக்கிறது. சின்ன படம் எடுக்கிறது ரொம்ப எளிதாகத்தான் இருக்கிறது. 
 
ஆனால் ரிலீஸ் பண்றது ரொம்ப சிரமமாக இருக்கிறது. தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் 15 சிறிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும்.
 
மாதத்தில் மூன்று வாரங்களாவது சிறிய படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக வேண்டும். பண்டிகை காலங்களில் மட்டும் தான் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என்று ஒரு விதிமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் சின்ன படங்கள் பிழைக்க முடியும்.
 
சிறிய படங்கள்தான் நிறைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறது. அதனால் இந்த சிறிய படங்கள் ஜெயிப்பது திரைப்படகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எனவே  சிறிய பட்ஜெட் படங்களை ஆதரிக்க வேண்டும்" என்றார்.
 
வருடத்தில் 10 தினங்கள் மட்டுமே பெரிய படங்களை வெளியிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் பிரச்சனையே.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

நெட்பிளிக்ஸில் 2 கோடி பார்வைகளைக் கடந்து வெற்றிநடை போடும் மகாராஜா!

இரண்டாவது நாளில் பெரிய அளவில் சரிந்த தேவரா வசூல்!

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments