Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகுமாரின் 'மகாபாரதம்' எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது தெரியுமா?

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (16:48 IST)
சிவகுமார் என்றாலே நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த ஓவியர் மற்றும் இராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சிவகுமார் ஆற்றிய மகாபாரதம் சொற்பொழிவு தற்போது இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிவகுமார் கூறியதாவது:

மகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத டிவிடிக்கள் இதுவரை விற்றுள்ளன. “ஹிந்து” வில் பணிபுரிந்த மாருதி வெங்கடாசலம் என்ற பெண்மணி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.

இந்த நிலையில் குமார் என்பவர் ஒரு நாள் என்னிடம் வந்து என்னுடைய மகாபாரத சொற்பொழிவை இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய போவதாக கூறினார். நான் அவர் காமெடி பண்ணுகிறார் என்று என்னினேன். சரி முயற்சியுங்கள் என்றேன்.

மாருதி வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒரு வருடத்திற்கும் அதிகமான நேரமானது. அதனால்இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவ்ளோ பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments