தெலுங்கு படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலிக்க இதுதான் காரணம்… சிவகார்த்திகேயன் கருத்து!

vinoth
செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (11:07 IST)
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.

படத்தின் முன்பதிவு தொடங்கியும் பெரியளவில் ரசிகர்களிடம் ஆர்வம் இல்லாததால் முன்பதிவு மந்தமாகதான் உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது படக்குழு. அப்போது பேசிய சிவகார்த்திகேயன் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில் “தெலுங்கு சினிமாவில்  பாகுபலி, ஆர் ஆர் ஆர் மற்றும் புஷ்பா போன்ற படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்கின்றன. அதற்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஒரு கதையை நம்பிவிட்டால் கணக்குப் பார்க்காமல் செலவு செய்வார்கள். நம்பிக்கையோடு அந்த படத்தைத் தயாரிப்பார்கள். தெலுங்கு படங்களின் இமாலய வெற்றிக்கு தயாரிப்பாளர்கள்தான் காரணம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments