பிரபல பாடகி சின்மயி மற்றும் நடிகர் ராகுல் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சின்மயி. அந்த படத்தில் அவர் பாடிய ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடலாசிரியர் வைரமுத்து மீது மீ டு குற்றச்சாட்டை வைத்த அவர், தன்னை போல பாதிக்கப்பட்ட பல பெண்களின் மி டு புகார்களையும் தன்னுடைய டிவிட்டர் பக்கம் மூலமாக வெளியிட்டார். இதன் மூலம் சர்ச்சைகளின் மையமாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இப்போது சின்மயி தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை அறிவித்துள்ளார். இது சம்மந்தமான அவரின் ட்வீட்டில் “ திரிபத் & ஷர்வாஸ். இப்போதும் எப்போதும் எங்கள் உலகின் மையமாக இருப்பார்கள்” என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் கமெண்டில் சின்மயிக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.