அடிக்க சொன்னதே ப்ரவீன்தான்! கம்ரூதின் சண்டையில் ட்விஸ்ட்! லீக்கான வீடியோ! Biggboss Season 9!

Prasanth K
செவ்வாய், 4 நவம்பர் 2025 (12:53 IST)

பிக்பாஸ் வீட்டில் ப்ரவீன் - கம்ருதீன் இடையே பெரிய கைகலப்பு எழுந்த நிலையில் அது திட்டமிட்ட ப்ராங்க் என்று தெரிய வந்துள்ளது.

 

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் ப்ரவீன் - கம்ருதீன் இடையே வாக்குவாதம் எழுந்து சண்டையாக வெடித்தது. இதனால் ப்ரவீனும், கம்ருதீனும் எகிறிக் கொண்டு நின்ற நிலையில், கம்ரூதின் ப்ரவீனை பளார் என வைத்து கீழே சாய்த்தார். இந்த சண்டையை கண்ட மொத்த பிக்பாஸ் வீடும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டது.

 

முக்கியமாக சாண்ட்ரா இந்த சண்டையை பார்த்து அழுதே விட்டார். இந்நிலையில் இந்த மொத்த சண்டையும் ப்ரவீன் - கம்ரூதின் திட்டமிட்டு செய்த ப்ராங்க் என தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் லைவில் இது வெளிவந்துள்ளது. ப்ரவீன் கம்ரூதினிடம் நாம் சண்டை போட்டு ப்ராங்க் செய்யலாம் என்கிறார். அதற்கு கம்ரூதின் நான் அடிப்பது போல நடிக்கிறேன் என சொல்ல, அதை மறுத்த ப்ரவீன், ‘என்னை உண்மையாவே அடி.. நான் வலி தாங்குவேன்’ என சொல்லி கம்ரூதினை ஒத்துக் கொள்ள வைக்கிறார்.

 

இது அவர்களுக்கு வேடிக்கையாக தெரிந்தாலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களையும், ஆடியன்ஸையும் இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்த விஷயத்தை வார இறுதியில் விஜய் சேதுபதி கேட்பார், கண்டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments