பிரம்மாண்ட அறிவியல் புனைகதை படம்… கைகோர்க்கும் ஏஜிஎஸ்- ப்ரதீப்பின் அடுத்த பட அப்டேட்!

vinoth
செவ்வாய், 4 நவம்பர் 2025 (08:27 IST)
ப்ரதீப், மமிதா பைஜு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் ‘டியூட்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கினார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகி சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகப் ப்ரதீப் அடைந்திருக்கும் வளர்ச்சி அளப்பரியது. அவர் நடித்த முதல் மூன்று படங்களும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன. இது மற்ற எந்த நடிகர்களுக்கும் அமையாத ஒரு தொடக்கமாகவுள்ளது.

இதையடுத்து ப்ரதீப் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள LIK படம் டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதையடுத்து தனது அடுத்த படத்தைத் தானே இயக்கி நடிக்கவுள்ளார் ப்ரதீப். அறிவியல் புனைகதை படமாக உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக அவர் நடித்த ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய இரு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments