மிருதன் இரண்டாம் பாக வேலைகளைத் தொடங்கிய சக்தி சௌந்தர்ராஜன்..!

vinoth
வியாழன், 18 செப்டம்பர் 2025 (12:33 IST)
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். இந்த படத்தின் இயக்குனர் தான் இயக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களில் வரும்படி இயக்குவார். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கேப்டன் திரைப்படம் படுதோல்வி அடைந்து கேலிகளையும் எதிர்கொண்டது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, லட்சுமி மேனன், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மிருதன் தமிழில் முதல் ஸோம்பி வகை திரைப்படமாக இருந்தது. இந்த படம் வந்த போது நல்ல கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது.

தற்போது வரிசையாக தோல்வி படங்களாகக் கொடுத்து வரும் ஜெயம் ரவி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் மிருதன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவுள்ளனர். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments