சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற நிகழ்ச்சியைக் காண 20 ஆயிரம்பேர் கூடுவார்கள் என தெரிவித்து, காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த நிலையில், கூடுதலாக 21 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 41 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், ACTC நிறுவனம் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் செலுத்த வேண்டிய 10 சதவீத கேளிக்கை வரி செலுத்தாததால் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
ஏற்கனவே இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மார்ஸ் தமிழ்நாடு யூடியூப் சேனலில் இதுகுறித்து வெண்பா என்பவர் ஏ..ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் என சிலர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இதில், விஜய் ஆண்டனியின் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இன்று விஜய் ஆண்டனி தன் சமூக வலைதள பக்கத்தில்,
என் மீது அன்பு கொண்ட என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன். இந்தக் கடிதம் மூலம் சில சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி யூடியூப் சேனலில் என்னையும், சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பியிருக்கிறார். அது முற்றிலும் பொய். அந்த யூடியூப் நிறுவனம் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் இருந்து வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக வழங்க முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.