Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா தோல்விக்கு இவருதான் முக்கியக் காரணம்… கொந்தளிக்கும் ரசிகர்கள்!

vinoth
திங்கள், 25 நவம்பர் 2024 (14:49 IST)
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி புஸ்வானமாகியது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

கங்குவா படத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சமூகவலைதளங்கள் என்றால் அது மிகையாகாது. தமிழ் சினிமாவில் தற்போது முதல் நாள் முதல் காட்சி விமர்சனம் என சொல்லப்படும் பொதுமக்களின் கருத்துகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குகின்றன. அவை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கம் செலுத்துகின்றன. சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவான ‘கங்குவா’ திரைப்படம்  ரிலீஸான போது அதைக் காலி பண்ணியதில் இந்த விமர்சனங்கள் முக்கியப் பங்காற்றின.

இந்நிலையில் இந்த படத்துக்கு அளவுக்கதிமாக படக்குழு விளம்பரம் செய்து அதீதமாக புகழ்ந்ததும் ரசிகர்களின் வெறுப்புக்கு ஒரு காரணமாக அமைந்தது. அந்த வகையில் கங்குவா படம் பற்றி தொடர்ந்து ஊடகங்களில் பேசி அதற்காக 100 நேர்காணல்கள் வரை கொடுத்து ப்ரமோஷன் செய்தார் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்செயன். அவர் கொடுத்த பில்டப்புகளை நம்பிதான் பலர் படம் பாகுபலி போல இருக்கும் என நம்பி சென்று ஏமாந்ததாகப் புலம்பி வருகின்றனர். ஆனால் பட ரிலீஸுக்குப் பிறகு தனஞ்செயன் சமூகவலைதளங்களில் இருந்து விலகி எதுவும் பேசாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

கேம்சேஞ்சர் ரிலீஸ்… ஷங்கரால், தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட சிக்கல்!

சூர்யா & R J பாலாஜி இணையும் படத்தின் தொடக்கம் எப்போது?... வெளியான தகவல்!

நாக சைதன்யாவுக்கு கொடுத்த பரிசுகள் எல்லாம் வீண்… மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய சமந்தா

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்?.. வெளியான சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments