பிரபல பாலிவுட் நடிகர் த்ரிதானந்த் பேஸ்புக் லைவில் விஷம் குடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் தொலைக்காட்சி தொகுப்பாளாராகவும், நடிகராகவும் இருப்பவர் த்ரிதானந்த். இவர் தி கபில் ஷர்மா ஷோ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியில் கபில் ஷர்மா தொகுப்பாளராக உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் த்ரிதானந்த் ராவ் பங்கேற்றார்.
இவர் பிரபல நடிகர் நானா படேகர் போன்று பேசி மிமிக்ரி செய்பவர் ஆவார். இந்த நிலையில், பேஸ்புக் லைவில் இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, தனக்கு ஒரு பெண்ணால் மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி விஷம் குடிப்பதாகக் கூறி, ஒரு கிளாசில் இருந்ததை குடித்துவிட்டார். அந்த வீடியோவும் முடிந்துவிட்டது.
அதன்பின்னர், அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து அவர் தற்போது நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.