Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகர் இன்று காலமானார் ! திரையுலகினர் அஞ்சலி

பிரபல நடிகர் இன்று காலமானார் ! திரையுலகினர் அஞ்சலி
, வெள்ளி, 14 மே 2021 (16:42 IST)
சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள், மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் விவேக்ம்,மாறன், பாண்டு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள், எஸ்.பி.ஜனநாதன், கே.விஆனந்த் உள்ளிட்ட  இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில் நேற்று  தயாரிப்பாளர் கலைச்செல்வன் கொரொனாவால் பலியானார். இவர் தாதா 87 படத்தை தயாரித்தவர் ஆவார்.

இந்நிலையில் இன்று பிரபல சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ்  காலமானார்.

பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகர் குட்டி ரமேஷ். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் நாயகியின் தந்தையாக நடித்து மக்களிடம் பிரபலமானவர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குட்டிரமேஷ் இன்று காலமானார். அவருக்கு நடிகர்களும், உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி இருப்பது சந்தேகம்தான்… காரணம் இதுதான்!