வசூலில் பட்டையக் கிளப்பும் ‘ட்யூட்’… மூன்று நாளில் 66 கோடி ரூபாய்!

vinoth
செவ்வாய், 21 அக்டோபர் 2025 (08:18 IST)
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். அடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது.

இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது.

ரிலீஸுக்குப் பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது. வெளியாகி மூன்று நாட்களில் சுமார் 66 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழுக்கு இணையாக தெலுங்கு டப்பிங் வெர்ஷனிலும் இந்த படம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments