Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணையும் கார்த்தி?

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (11:17 IST)
கார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை, தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டு வருவதாகத்  தெரிகிறது.

 
‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. போலீஸாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். உண்மைச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் வினோத்.
 
சில வாரங்களுக்கு முன்பு ஷூட்டிங் முடிந்த இந்தப் படத்தை, தீபாவளி விடுமுறையில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டு வருகிறாராம். பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருப்பதால், பெஸ்டிவல் சமயத்தில்தான் கலெக்‌ஷன் அள்ளலாம்  என்பதால் இந்த முடிவாம்.
 
விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் என கூறப்பட்டுவரும் நிலையில், அவருடன் கார்த்தி மோதும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, ‘குலேபகாவலி’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘சொல்லிவிடவா’, ‘ஹர ஹர  மஹாதேவஹி’ ஆகிய படங்களும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments