விழா மேடையில் புஷ்பா 3 படத்தை அறிவித்த சுகுமார்!

vinoth
ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (14:05 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. இப்போது வரை கணிசமான திரையரங்குகளில் இந்த படம் ஓடி வருகிறது. படம்  திரையரங்குகள் மூலமாக 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இதன் மூலம் இந்திய சினிமாக்களில் அதிக வசூல் செய்த பாகுபலி 2 மற்றும் டங்கல் ஆகிய படங்களின் வசூலை முந்தியது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகி அதிலும் சாதனைப் படைத்தது.  இரண்டாம் பாகம் ரிலீஸான போதே மூன்றாம் பாகம் குறித்தக் கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் சைமா விருது நிகழ்ச்சியில் ஐந்து விருதுகளைப் புஷ்பா 2 கைப்பற்றியது. அப்போது மேடையில் பேசிய இயக்குனர் சுகுமார் புஷ்பா 3 பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  மேலும் மூன்றாம் பாகத்துக்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments