நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.
நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அறிவிக்கப்பட்டு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது. இதை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க உள்ளார்.
இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வந்ததாக சொல்லப்பட்டது. படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசிலும், மற்றொரு முக்கியமான வேடத்தில் நடிக்கை வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இப்போது கொரோனா குமார் திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக தயாரிப்பு தரப்பு வேறு ஒரு ஹீரோவை வைத்து அந்த படத்தை எடுக்க முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.