கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிசி’ டீசர் இணையத்தில் கசிந்தது.. படக்குழுவினர் அதிர்ச்சி!

vinoth
வியாழன், 3 ஜூலை 2025 (10:52 IST)
உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனர்களில் முக்கியமானவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய டார்க் நைட் ட்ரைலாஜி, இன்செப்ஷன், இண்டெஸ்டெல்லார் உள்ளிட்ட படங்களுக்கு தமிழகத்திலுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முதன்முறையாக வரலாற்று இதிகாச படத்தை இயக்குகிறார் நோலன்.  இதில் மேட் டேமன் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஹாலிவுட்டில் பெரும்பாலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில், நோலன் அதற்கு முற்றிலும் நேரெதிரானவர். அவருக்கு கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்துவது பிடிக்காது என்பதால் அவர் படங்களில் பல காட்சிகளை ஒரிஜினலாகவே படமாக்குவார். தற்போது ஒடிசிக்காக பிரம்மாண்டமாக ஒரு நகரையே அவர் உருவாக்கியுள்ளார்.

அதில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் 1.16 நிமிடம் ஓடும் டீசர் இணையத்தில் கசிந்துள்ளது. எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் டீசர் வெளியானதை அடுத்துப் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments