சிரஞ்சீவியின் 150 -வது படமான, கைதி நெ. 150 படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழில் வெளியான கத்தி படத்தைதான், கைதி நெ. 150 என்ற பெயரில் தெலுங்கில் எடுத்துள்ளனர். சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தப் படம், சிரஞ்சீவியின் 150 -வது படம். விவி விநாயக் இயக்கியுள்ளார்.
2017 ஜனவரி 11 -ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.