Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதி போட்டிக்கான டிக்கெட்: பிக்பாஸ் அறிவிப்பால் பரபரப்பு

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (09:18 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேறியதை அடுத்து தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் இன்னும் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் இறுதி போட்டிக்கு ஐவர் செல்வர் என்றும், அந்த ஐவரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்றும் கமல்ஹாசன் நேற்று தெரிவித்தார்.
 
இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்படும் என்றும் அந்த டாஸ்குகளில் வென்று முதலிடத்தை பெறுபவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லலாம் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளதால் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனையடுத்து ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு டாஸ்குகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேமை சரியாக கவின் ஆட ஆரம்பித்துவிட்டதாக சாண்டி கூற, இந்த டிக்கெட் எனக்குத்தான் வேண்டும் என்று சேரன் கூறுகிறார். தர்ஷன், முகின் ஆகியோர்களும் இந்த டிக்கெட்டுக்காக கடுமையாக போராடுகின்றனர். இந்த நிலையில் யாருக்கு அந்த டிக்கெட் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
இன்றைய மக்களின் கணிப்பின்படி சேரன் மற்றும் ஷெரின் ஆகியோர் வெளியேற்றப்பட்டு மீதியிருக்கும் ஐவர் இறுதிப்போட்டிக்கு செல்வர் என்றும், தர்ஷன், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவரில் ஒருவர் டைட்டில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தர்ஷனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments