Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தாயே தெய்வமாகிவிட்டதால்...’’.ஏ.ஆர். ரஹ்மானை வாழ்த்திய பிரபல நடிகர்

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (18:07 IST)
இந்தியாவின் பொக்கிஷமாகப் பார்க்கப்படுபவரும், ஆஸ்கார் நாயகருமான ஏ.ஆர்.ரஹ்மான் நாளை (06-1-21) ஆம் தேதி தனது 54 வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். எனவே நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’’மகனின் தாயே தெய்வமாகிவிட்டதால் இன்னும் எல்லா புகழுக்கும் அவரே ஆசி வழங்குவார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
 
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான படம் ரோஜா. இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் திலீப்குமார் என்ற ஏ.ஆர்.ரஹ்மான்.
இப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு ரஹ்மானின் பாடல்களும் இசையும் ஒருகாரணம்.

இதனையடுத்து, தனது ஒரே படத்திலேயே இளையராஜாவுக்கு போட்டியாக ரஹ்மான் உருவானார். இத்தனைக்கும் இளையராஜாவிடன் கீ போர்ட் பிளேயராக தனது இளம் வயதில் தந்தையின் மரணத்திற்குப் பின் இசைத்தொழிலைத் தொடங்கியவர் ரஹ்மான்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராகப் புகழ்பெற்ற ரஹ்மான 2009 ஆம் ஆண்டு சிறந்த பாடம் மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்து இன்றும் பலருக்கும் முன்னோடியாக உள்ளார்.

சமீபத்தில்ட் .A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமாபேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு முன்கூட்டியே வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில்,

God is Everything !

என உறுதியாக நம்பும் மகனின் தாயே தெய்வமாகிவிட்டதால்.... இன்னும் எல்லா புகழுக்கும் அவரே ஆசி வழங்குவார்.நம் ஊருக்குக் கிடைத்த உலகப் பெருமையை உளமார வாழ்த்துவோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments