படுதோல்வி அடைந்த அனுஷ்காவின் ‘காட்டி’ படம்… வசூல் இவ்வளவுதானா?

vinoth
சனி, 13 செப்டம்பர் 2025 (09:16 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக அவர் நடித்த  “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்துக்குப் பிறகு  இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. அதற்கு அவர் உடல் எடையைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டதுதான் காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த ‘காட்டி’ என்ற திரைப்படம்  நேற்று பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு ரிலீஸானது. இந்த படத்தில் விக்ரம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க கிரிஷ் இயக்கியிருந்தார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று மோசமான வசூலைக் குவித்து வருகிறது. சுமார் 45 கோடி ரூபாய் செலவில் உருவான ‘காட்டி’ படம் எட்டு நாட்களில் சுமார் 7 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments