Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை திரும்பும் அஜித்… விரைவில் பாங்காங் கிளம்பும் அஜித் 61 டீம்!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (15:11 IST)
அஜித்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் பின்னர் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மேலும் தாமதம் ஆகி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் ரிலீஸாகும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு மோதும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் ஒன்றை படமாக்க பாங்காங் செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் வட இந்தியா முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் இன்று சென்னை திரும்ப உள்ளதாகவும், விரைவில் பாங்காங் செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டேன்... ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சம்பவம்!

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என்னாச்சு… செல்வராகவன் அளித்த பதில்!

தீபாவளி வின்னர் லக்கி பாஸ்கரின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… !

ராம்குமார் விஷ்ணு விஷால் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

கோவையில் தொடங்கும் ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments