Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சார் செய்யப்பட்ட அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டீசர்… வெளியான முக்கிய தகவல்!

vinoth
வியாழன், 27 பிப்ரவரி 2025 (09:49 IST)
நீண்ட இடைவெளுக்குப் பிறகு இந்த ஆண்டில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. இதில் விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்று, வசூலிலும் சுணக்கம் கண்டது. இதையடுத்து குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நாளை இந்த படத்தின் டீசர் வெளியாகிறது. இதையொட்டி சமீபத்தில் அந்த டீசர் சென்சார் செய்யப்பட்டுள்ளது. டீசரின் ஓடும்நேரம் 1 நிமிடம் 34 வினாடிகளாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் எனக்கு இவர்தான் போட்டி.. பிரபலத்திடம் மம்மூட்டி பகிர்ந்த தகவல்!

மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி & பாலாஜி தரணிதரன் கூட்டணி!

பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

கேம்சேஞ்சர் படத்தில் நடித்து துணை நடிகர்கள் போலீஸீல் புகார்… பின்னணி என்ன?

மோகன்லாலின் எம்பூரான் திரைப்படத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸ் புகழ் நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments