Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கில்லி’ ரீரிலீஸ் ஆன தியேட்டரில் கலாட்டா செய்த அஜித் ரசிகர்கள்.. ரோகிணி தியேட்டரில் பரபரப்பு..!

Mahendran
புதன், 1 மே 2024 (16:31 IST)
விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான கில்லி திரைப்படம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு புதிய திரைப்படங்களுக்கு இணையாக வசூலை வாரி குவித்து வருகிறது என்பதை தெரிந்தது.

இந்த நிலையில் இன்று அஜித் பிறந்தநாள் என்பதால் அஜித் நடித்த தீனா திரைப்படம் ரீரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அந்த படத்தையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் விஜய் நடித்த கில்லி திரைப்படம் அஜித் நடித்த தீனா திரைப்படம் அருகருகே உள்ள தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் தீனா திரைப்படத்தின் இடைவேளையின் போது திடீரென கில்லி படம் ஓடும் தியேட்டருக்குள் புகுந்த அஜித் ரசிகர்கள் அஜித் அஜித் என்று கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்களும் விஜய் விஜய் என்று கோஷமிட்டதால் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது . இதனை அடுத்து திரையரங்க காவலர்கள் இருதரப்பு ரசிகர்களையும் அவரவர் தியேட்டருக்கு செல்லும்படி வலியுறுத்தியதை அடுத்து சமாதானம் ஏற்பட்டது.

அஜித் விஜய் படங்கள் ஒரே வளாகத்தில் ரீரிலீஸ் ஆனால் கூட பிரச்சனை ஏற்படும் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments