Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் கற்றாழை பாயசம் செய்ய....!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாசிப் பருப்பு - 1 கப்
துருவிய வெல்லம் - 2 கப்
காய்ச்சிய பால் - 2 கப்
கற்றாழை - 2 (தோல் சீவி நறுக்கியது)
முந்திரி - 10
பாதாம் - 10
ஏலக்காய்ப் பொடி - 2 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
 
கற்றாழை பாயசம் செய்வதற்கு முதலில் கற்றாழையில் இருக்கும் தோல்பகுதியை சீவி நன்றாக சுத்தம் செய்து பொடிதாக நறுக்கி கொள்ளவும். பின்பு பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு பாசி பருப்பபை ஒரு வாணலியில் போட்டு மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும். பின்பு குக்கரில் நன்றாக குழையும் வரை வேகவைத்து மசித்து கொள்ளவும். பின்னர் அதனுடன் நன்கு காய்ச்சிய பாலை சேர்த்துக் கொள்ளவும்.
 
பின்பு துருவி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருங்கள். பின்னர் வெல்லம் கரைந்ததும் அவற்றில் கற்றாழையை சேர்த்து சிறிது நேரம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா,  முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமுள்ள மற்றும் சுவையான கற்றாழை பாயசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments