இரட்டையர் டென்னிஸில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள இந்தியாவின் மகேஷ் பூபக்டி-லியாண்டர் பயஸ் ஜோடி சென்னை ஓபன் டென்னிஸில் முதல் வெற்றியை ஈட்டினர்.
வாவ்ரின்கா-டான்சரேவிச் ஜோடியை எதிர்கொண்ட பூபதி-பயஸ் இணை 3- 6, 7- 6, 10- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் ஓபன் சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கக்துடன் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துஅள்ளனர்.
முதல் செட்டில் வாவ்ரின்கா - டான்சேவிச் இணை அபாரமாக ஆடி ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் அதன் பிறாகு டை பிரேக்கில் இரண்டாவது செட்டை வென்றனர்.
பிறகு சூப்பர் டை-பிரேக் ஆட்டத்தில் சில சிறப்பான அதிரடி ஷாட்களை விளையாடி துவக்கத்திலேயே 4- 1 என்று முன்னிலை பெற்ற பயஸ்-பூபதி இணை பிறகு 10 - 4 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.