Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாக்கி: ஹாலந்தை இந்தியா வீழ்த்தியது

Webdunia
சனி, 13 டிசம்பர் 2008 (12:57 IST)
அர்ஜென்டீனா தலை நகரில் ஹாலந்து அணிக்கு எதிரான 21 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் ஒரே ஹாக்கி டெஸ்ட் போட்டியில் இந்தியா 3- 2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

அணித் தலைவர் திவாகர் ராம் ஆட்டத்தின் 17, 51ஆவது நிமிடங்களில் அபாரமாக இரண்டு கோல்களை அடிக்க 24ஆவது நிமிடத்தில் மந்திப் ஆன்ட்டில் 24ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.

இந்திய வீரர்கள் முதலிலிருந்தே ஆதிக்கம் செலுத்தினர். வீரர்கள் களத்தில் விரைவில் தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டு அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே பந்தை வைத்திருந்தனர்.

இடைவேளையின் போது இந்தியா 2- 0 என்று முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப்பின்பு ஹாலந்து ஒரு கோலை அடித்த போதும் இந்திய அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தது. இதனால் திவாகர் ராம் பெனால்டி கார்னர் வாய்ப்பை 3-வது கோலாக மாற்றினார்.

அதன் பிறகு ஹாலந்து கோல் அடித்தும் பயனில்லாமல் போனது.

அர்ஜென்டீனா அணிக்கு எதிராக இந்தியா நாளை 4-வது இறுதி டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

Show comments