தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் காயமடைந்துள்ளதால் அவர் 2 வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அவர் தேவைப்பட்டலே தவிர விளையாட களமிறக்கப்பட மாட்டார் என்று தெரிகிறது.
ஸ்ரீசாந்த் பந்தில் நெஞ்சில் அடி வாங்கினார் காலிஸ், இதனால் நெஞ்சின் பக்கவாட்டுப் பகுதியில் தசைப்பிடிப்பு கடுமையாக ஏற்பட்டது.
இதனால் ஒரு நாள் போட்டித் தொடரிலும் அவரது பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது.
நேற்று ஜாக் காலிஸ் அபாரமாக விளையாடி 161 ரன்கள் எடுத்து ரிக்கி பாண்டிங்கின் 39 சதங்கள் சாதனையை சமன் செய்தார்.