4-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய முன்னாள் நட்சத்திர வீரரும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் தலைவருமான அனில் கும்ளே திடீரென விலகுவதாக அறிவித்தார்.
விலகலுக்கான காரணங்கள் எதையும் தெரிவிக்காத கும்ளே, தன்னை ஆதரித்த உரிமையாளர், மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இவரது தலைமையில் கடைசி 2 ஐ.பி.எல். போட்டிகள் மற்றும் சாம்பியன் லீக் இருபது ஓவர் கிரிக்கெட்டில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி சவாலாகத் திகழ்ந்தது.
கர்நாடகா கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பொறுப்பு காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் என்று இவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இம்மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.