Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ம்‌பீ‌ர், ச‌ச்‌சி‌ன் அபார‌ம்: இந்தியா 142/2

க‌ம்‌பீ‌ர், ச‌ச்‌சி‌ன் அபார‌ம்: இந்தியா 142/2
, செவ்வாய், 4 ஜனவரி 2011 (09:31 IST)
கே‌ப்டவு‌னி‌ல் நட‌ந்து வரு‌ம் தெ‌ன் ஆ‌‌ப்‌பி‌ரி‌க்காவு‌க்கு எ‌திரான இறு‌தி டெ‌ஸ்‌ட் போ‌‌ட்டி‌யி‌ல் க‌ம்‌பீ‌ர், ச‌ச்‌சி‌ன் ஆ‌கியோ‌‌ரி‌ன் அபார ஆ‌ட்ட‌த்தா‌ல் இ‌ந்‌தியா 2 ‌வி‌க்கெ‌‌‌ட்டுகளை இழ‌ந்து 142 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 362 ரன்களுக்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌‌‌ட்டுகளையு‌‌ம் இழ‌ந்தது. அதிகபட்சமாக காலிஸ் அபாரமாக ஆடி 161 ரன் எடுத்தார்.

இ‌ந்‌திய தர‌ப்‌பி‌ல் ஸ்ரீசாந்த் 5 விக்கெட்களும், ஜாகீர்கான் 3 விக்கெட்களும், இசாந்த் சர்மா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்துள்ளது. கம்பீர் 65 ரன்களுடனும், தெண்டுல்கர் 49 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

சேவாக் 13 ரன்களும், டிராவிட் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இ‌‌ன்று 3வது நா‌ள் ஆ‌ட்ட‌ம் தொட‌ங்கு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil