Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌லி‌ஸ் அபார‌ம்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 232/4

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2011 (10:03 IST)
கே‌ப்டவு‌னி‌ல் நடைபெறு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான கடை‌சி டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் அ‌ம்லா, கா‌லி‌ஸ் ஆ‌கியோ‌ரி‌ன் அபார ஆ‌ட்ட‌த்தா‌ல் முத‌ல் நா‌ள் ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா அ‌ணி 4 ‌வி‌க்கெ‌‌ட்டுகளை இழ‌ந்து 232 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

பூவா தலையா வெ‌ன்ற இ‌ந்‌திய அ‌ணி முத‌லி‌ல் ப‌ந்து ‌வீ‌ச்சை தே‌ர்வு செ‌ய்தது. தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா அ‌‌ணி‌யி‌ன் தலைவ‌ர் ‌ஸ்‌மி‌த் 6 ர‌ன்‌னி‌ல் ஜா‌கீ‌ர்கா‌ன் ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர்.

ம‌ற்றொரு தொட‌க்க ‌வீர‌ர் ‌‌பீ‌‌ட்ட‌ர்ச‌ன் 21 ர‌ன்‌ எடு‌த்‌திரு‌ந்தபோது இசா‌ந்‌த் ச‌ர்மா ப‌ந்‌தி‌ல் வெ‌ளியே‌‌றினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அம்லா - கா‌லி‌ஸ் இணை சே‌ர்‌ந்து தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா அ‌ணியை ச‌ரி‌வி‌ல் இரு‌ந்து ‌மீ‌ட்ட‌ர். 59 ர‌ன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்த அம்லா, ஸ்ரீ சா‌ந்‌த் ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர்.

‌ பி‌ன்ன‌ர் வ‌ந்த டி ‌வி‌ல்‌லிய‌ர்‌ஸ் 26 ர‌ன்‌னி‌ல் வெ‌ளியே‌றினா‌ர். இவரது ‌வி‌க்கெ‌ட்டையு‌ம் ஸ்ரீசா‌ந்‌த் கை‌ப்ப‌ற்‌றினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து கா‌லி‌‌சுட‌ன் இணை சே‌ர்‌ந்த ‌பி‌ரி‌ன்‌ஸ் அபாரமாக ‌விளையாடினா‌ர்.

த‌ற்போது தெ‌ன் ஆ‌ப்‌பிர‌ி‌க்கா அ‌ணி முத‌ல் நா‌ள் ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் 4 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 232 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. கா‌லி‌ஸ் 81 ர‌ன்‌னிலு‌ம், ‌‌பி‌ரி‌ன்‌ஸ் 28 ர‌ன்‌னிலு‌‌ம் கள‌த்த‌ி‌ல் உ‌ள்ளன‌ர். இ‌ன்று 2வது நா‌ள் ஆ‌ட்ட‌ம் தொட‌ங்கு‌கிறது.

இ‌ந்‌தியா தர‌ப்‌பி‌ல் ஸ்ரீசா‌ந்‌த் 2 ‌வி‌க்கெ‌ட்டு‌ம், ஜா‌கீ‌ர்கா‌ன், இசா‌ந்‌த் ச‌ர்மா ஆ‌கியோ‌ர் தலா ஒரு ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌ம் கை‌ப்ப‌ற்‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

Show comments