Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக், ஸ்ட்ராஸ் சதம்; இங்கிலாந்து 309/1

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2010 (14:28 IST)
ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ், துவக்க வீரர் குக் ஆகியோர் அபாரமான சதங்களை அடிக்க அந்த அணி ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்ததுள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 19/0 என்று துவங்கிய இங்கிலாந்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்காமல் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்ச்சாளர்களை வெறுப்பேற்றியது.

துவக்கக் குட்டணி 188 ரன்களைச் சேர்த்தது. இதில் ஸ்ட்ராஸ் 110 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். குக் 132 ரன்களுடனும் டிராட் 54 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

ஸ்ட்ராஸின் 19-வது டெஸ்ட் சதமாகும் இது. மேலும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 4-வது சதமாகும் இது.

நடுவில் ஸ்ட்ராஸ் கொடுத்த கேட்சை மிட்செல் ஜான்சன் மிட் ஆன் திசையில் கீழே விட்டார். இது ஒரு முக்கியமான தவறாக இன்று அமைந்தது. நிக் குக் அபாரமான முறையில் ஆடி சதம் எடுத்தார். அதன் பிறகு இவர் ஒரு புல்ஷாட் ஆடினார் ஆனால் அது பீட்டர் சிடிலிடம் கேட்சாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பந்து முன்னால் விழுந்தது.

ஹில்ஃபென் ஹாஸ், மிட்செல் ஜான்சன், சிடில், டோஹெர்ட்டி ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

ஆட்டம் டிராவை நோக்கி செல்கிறது என்று இப்போதைக்குக் கூறலாம். நாளை கடைசி நாளில் இங்கிலாந்து விரவிவில் சரிந்தால் மட்டுமே ஆஸ்ட்ரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

Show comments