Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜமைக்காவில் இன்று முதல் டெஸ்ட்

ஜமைக்காவில் இன்று முதல் டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஜமைக்காவில் துவங்குகிறது.

இங்கிலாந்து அணி ஓய்ந்து முடிந்த சர்ச்சைகளுக்கு பிறகு கெவின் பீட்டர்சன் தலைமையிலிருந்து ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தலைமைக்கு மாறியுள்ளது.

மேற்கிந்திய அணிக்கு கிறிஸ் கெய்ல் அணித் தலைவராக நீடிக்கிறார். இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விகளுக்கு பிறகு இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டும் உத்வேகத்துடன் விளையாடும்.

மேற்கிந்திய அணியிலும் சேவியர் மார்ஷல், டெவன் ஸ்மித் போன்ற புது முகங்கள் நன்றாக விளையாடி வருகின்றனர். பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல், சர்வாண் தவிர சுவர் போன்று தனது விக்கெட்டை காத்து நிற்கும் ஷிவ் நாராயண் சந்தர்பால் உள்ளார். பந்து வீச்சில் நல்ல வேகத்தில் வீசக்கூடைய ஜெரோம் டெய்லர், ஃபிடல் எட்வர்ட்ஸ், டேரன் போவெல் ஆகியோர் உள்ளனர்.

இந்த மைதானத்தில்தான் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி லாரா இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை 47 ரன்களுக்கு சுருட்டியது. ஹாம்ரிசன் 12 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கடந்த ஆண்டு மேற்கிந்திய அணி இதே பிட்சில்தான் ஆஸ்ட்ரேலியாவை 18/5 என்று நிலை தடுமாறச் செய்தது. ஆனால் போட்டியை வென்றது ஆஸ்ட்ரேலியா.

இங்கிலாந்து அணி: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், அலிஸ்டைர் குக், இயன் பெல், கெவின் பீட்டர்சன், பால் காலிங்வுட், ஃபிளின்டாஃப், மேட் ப்ரையர், ஸ்டூவர்ட் பிராட், ரியான் சைட்பாட்டம், ஹார்மிசன், மான்டி பனேசர்.

மேற்கிந்திய அணி: கெய்ல், டெவன் ஸ்மித், சர்வாண், சந்தர்பால், சேவியர் மார்ஷல், பிரெண்டன் நாஷ், தினேஷ் ராம்தின்(வி.கீ), டெய்லர், போவெல், அமித் ஜேகர்னாத், ஃபிடல் எட்வர்ட்ஸ்.

ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.00 மணியளவில் துவங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil