நைரோபியில் நடைபெறும் கென்யா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5-வது இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கென்யா முதலில் பேட் செய்து 49ஆவது ஓவரில் 199 ரன்களுக்கு சுருண்டது. ஒபுயா அதிகபட்சமாக 75 ரன்களை எடுத்தார். புடியா 40 ரன்களை கடைசியில் எடுத்தார். ஜிம்பாப்வே 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
ஜிம்பாப்வே தரப்பில் ரே பிரைஸ் 10 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், கிரீமர் 4 விக்கெட்டுகளையும் மஸகாட்சா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஜிம்பாப்வே அணியில் தற்போது மஸகாட்சா 12 ரன்களுடனும், மட்சிகென்யேரி 9 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.