Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவாக் சதம்; யுவராஜ் அவுட்: இந்தியா-245/3

சேவாக் சதம்; யுவராஜ் அவுட்: இந்தியா-245/3
, செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:12 IST)
இலங்கைக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. யுவராஜ் சிங் 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இன்னிங்சின் 30வது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 2 பவுண்டரி விளாசி சேவாக் தனது 10வது சதத்தை (75 பந்துகளில்) பூர்த்தி செய்தார். இவரது ஆட்டத்தில் 15 பவுண்டரிகளும் அடங்கும்.

இன்னிங்சின் 31வது ஓவரில் முரளிதரன் பந்தில் யுவராஜ் சிங், ஜெயவர்த்தனேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 95 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார்.

முரளிதரன் சாதனை: யுவராஜ் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திபாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை (502 விக்கெட்) முரளிதரன் சமன் செய்தார்.

இன்றைய போட்டி நிறைவடைய இன்னும் 18 ஓவர்கள் உள்ளதால், ஒருநாள் போட்டியில் வாசிம் அக்ரமின் சாதனையை முரளிதரன் முறியடிக்க இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்ற வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil